in

அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட மகா தீப தரிசனம் நிறைவு…..

அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட மகா தீப தரிசனம் நிறைவு…..

 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கடந்த 3ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது பஞ்சலோகத்தாலான கொப்பரையில் நெய் நிரப்பி மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த பத்து நாட்களும் கொப்பரையில் நெய் நிரப்பி அனுதினமும் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றுடன் பதினோரு நாட்கள் முடிவடையும் நிலையில் இறுதி நாளான இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து நாளை காலை மலை மீது இருந்து கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கொப்பரையில் இருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதனுடன் பல்வேறு வாசனை திரவியங்கள் சேர்த்து தீப மை தயார் செய்யப்படும்.

இந்த தீப மையை ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

What do you think?

திருக்காஞ்சி ஸ்ரீகெங்கைவராக நதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

2.77 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை