கொளுத்தும் கோடை வெயிலில் குளுகுளுவென வைகையாற்றில் உற்சாகமாக குளித்து மகிழும் பொதுமக்கள்
கொளுத்தும் கோடை வெயிலில் குளுகுளுவென வைகையாற்றில் உற்சாகமாக குளித்துமகிழும் பொதுமக்கள் – சுற்றுலா தளம்போல மாறிய வைகையாறு – மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாபயணிகளும் வருகைதந்து குளித்து செல்கின்றனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து நீர்வளத்துறை சார்பில் கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நாளொன்றுக்கு ஆயிரம் கன அடி நீரானது திறக்கப்பட்டது.
கடந்த 12ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள வைகை ஆற்று பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் வரத்து இருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் ஆற்று நீரில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து வைகை ஆற்றில் நீரானது ஓடும் நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து மதுரைக்கு வந்திருக்கக்கூடிய பொதுமக்கள் வைகையாற்று பகுதியை சுற்றுலா தளம் போல மாற்றியுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் வருகை தந்து ஏ.வி.மேம்பால தடுப்பு அணை அருகேயுள்ள வைகையாற்று பகுதியில் உள்ள படிகட்டுகளில் குளுகுளுவென குளித்து சென்று வருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெண்கள் முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக வைகை ஆற்று பகுதியில் குளித்துமகிழ்கின்றனர்.
வைகையாற்றின் நீர் கண்ணாடி போல தெளிவாக இருப்பதால் இங்கு குளிக்கவரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு கவனமுடன் குளிக்க வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடாது என தொடர்ந்து காவல் வாகனம் மூலமாக அறிவித்து வருகின்றனர்.
கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது வைகையாற்றில் தற்போதும் ஓடக்கூடிய நிலையில் அதனை சுற்றுலாத்தலம் போல மாறி மதுரை மட்டுமே பல்வேறு மாவட்ட மக்களும் , சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ கூடிய பகுதியாக மாறியுள்ளது மதுரை வைகையாறு.