நாகை அருகே தண்ணீர் இல்லாமல் கருகி வரும் குறுவைப் பயிர்களை கால்நடைகளை மேய விட்ட அவலம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குளையை அடுத்த வலிவலம் , தென்சாரி கோவில்பத்து, வடபாதி சுமார் 1000 ஏரிக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளையாறு மூலம் பாசன வசதி பெரும் இப்பகுதிகள் முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்லாமல் 25 நாட்கள் முதல் 40 நேரடி விதைப்பு செய்யப்பட்ட குருவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் காய்ந்து வயல்கள் வெடித்து பயிர்கள் கருகி வருகிறது.
சுமார் ஏக்கருக்கு 20,000 வரை செலவு செய்த நிலையில் தற்பொழுது வயல்கள் பாலம்பாலமாக வெடித்து காணப்படுகின்றது.
இதனால் பயிர்கள் கருகி விவசாயிகள் செய்வதறியாத நிலையில் பொதுப்பணித்துறையின் அலட்சியம் காரணமாக, பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நகைகளை அடகு வைத்து, வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்த நிலையில், அரசின் அலட்சியம் காரணமாக, பயிர்கள் கருகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் இதனால், விவசாயிகள் கருகும் பயிரை காப்பாற்ற முடியாமல், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாக ஆகட்டும் என வயலில் கால்நடைகளை மேயவிட்டுள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


