in

திருமோகூர் வரும் அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் பங்குனி தெப்பத் திருவிழா கோலாகலம்.

திருமோகூர் வரும் அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் பங்குனி தெப்பத் திருவிழா கோலாகலம்.

விழாவை முன்னிட்டு வண்ண மின்னொளியில் தெப்பத்தில் வலம் வந்த பெருமாளை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில்,103-வது திவ்ய தேசமாக மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூரில் அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் விளங்கி வருகிறது.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள இத்திருத்தலத்தில் நடைபெறும் விழாக்களில் சிறப்பு பெற்ற பங்குனி உத்திர திருவிழாவின் சிறப்பு நிகழ்வான தெப்ப திருவிழாவு விமர்சையாக நடைபெற்றது

இதையொட்டி கோவிலில் இருந்து உற்சவர் சகல பரிவாரங்களுடன் தெப்பம் மண்டபத்தில் எழுந்தருளியதையடுத்து சிறப்பு பூஜை மகா தீபாரதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளிய அதை அடுத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை வலம் வந்த காளமேக பெருமாளை பக்தர்கள்.தரிசனம் செய்தனர்.

விழாவில் திருமோகூர் மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வருகை புரிந்த பெருமாளை தரிசனம் செய்தனர் .

சிவ பூஜைக்கு உகந்த வில்வம் அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால் பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

What do you think?

விஜய்யை ஆதரிக்கும் சிபிராஜ்..விமர்சிக்கும் திவ்யா!” சத்யராஜ் குடும்பத்தில் அரசியல் யுத்தம்?

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்.