ஒருவர் இறந்தார் என்பதை ஆங்கிலத்தில் Died அல்லது Passed away என ஒரே சொல்
ஆனால் நம் தமிழ் மொழியில் ஒருவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தமிழ் மொழியில் மட்டும் சரியாகப் பேசினால் அதனை அறிய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
1) காலமானார் – வயதாகி இறப்பது
2) மரணமடைந்தார் – மாரடைப்பினால் இறப்பது
3) அகால மரணம் – விபத்துகளால் இறப்பது
4) உயிர் நீத்தார் – தற்கொலைச் செய்து கொண்டு செய்வது
5) கொலையுண்டார் – கொலையாகி இறப்பது
6) துயில் எய்தினார் – தூக்கத்தில் உயிர் போகுதல்
7) இயற்கை எய்தினார் – பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல். தீ விபத்து, பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல் , காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல், நீர் – ஜல சமாதி ஆகுதல், ஆகாயம் – விமானம், ஹெலிகாப்டர் போகும் போது விபத்து ஏற்பட்டு இறப்பது.


