in

Decades-களாக கோலிவுட் இல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கமர்சியல் குதிரை… சுந்தர்.சி

Decades-களாக கோலிவுட் இல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கமர்சியல் குதிரை… சுந்தர்.சி

கோடிகளைக் கொட்டி பிரம்மாண்டமாக படம் எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் லைட்டாக கமர்சியல் படங்களை கொடுத்து வெயிட்…டாக அள்ளி செல்பவர் சுந்தர் சி.

ஆனால் தன்னை போன்ற கமர்சியல் இயக்குனர்களுக்கு சினிமா துறையில் மரியாதை இல்லை என்று ஆதங்கபட்டுகொள்பவர் இயக்குனர் சுந்தர் சி.

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுந்தர் சி முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

கார்த்திக்கை வைத்து இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படத்தின் வெற்றிக்கு பிறகு அவரை வைத்து தொடர்ந்து ஐந்து ஹிட்டுகளை கொடுத்தவர்.

ஐந்து படங்கள் இயக்கிய உடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்த படம் பண்ணும் சான்ஸ் கிடைத்தது தனது முதல் படத்தில் ஹீரோயினாக நடித்த குஷ்பூ…வை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் 30 ஆண்டுகளில் இதுவரை 38 படங்களை இயக்கியிருக்கிறார்.

தலைநகரம் என்ற படத்தின் மூலம் ஹீரோ…வாக தோன்றியவர் தொடர்ந்து இயக்கத்திலும் நடிப்பிலும் கலக்கி வருகிறார். தற்பொழுது ஒரே நேரத்தில் நான்கு படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் சுந்தர். சி…யை கொண்டாட தவறிய இயக்குனர் என்று அஸ்வின் பாலா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மையிலேயே சுந்தர்சி கொண்டாடப்பட வேண்டிய ஒரு நபர் தமிழ் சினிமாவோ ரசிகர்களோ அவரை கொண்டாடுவதில்லை தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எப்பொழுதும் வருத்தப்பட்டு கொண்டிருப்பவர் சுந்தர் சி.

ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கம்மேர்சியால் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி என்று பதிவிட்டுள்ளார்.

What do you think?

இயக்குனர் நாகேந்திரன் மறைவு… திரைத்துறையினர் அதிர்ச்சி

சத்ததால் அதிரும் கோவை….TVK கட்சியின் தலைவர் நடிகர் தளபதி இன்று கோவை வந்தார்..