480 பாரம்பரிய நெல் ரகங்களை சீராக கொடுத்த தாய்மாமன்
பழங்காலத்தில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் நெல்,தானியம்,காய்கறி போன்றவற்றை தாய்மாமன் சீர்வரிசையாக கொடுத்து வந்தனர்.
இதனை கிழக்கு சீமையிலே படத்தில் இயக்குனர் பாரதிராஜா சிறப்பாக காட்சி படுத்தி இருந்தார்..இதனை நினைவு கூறும் நிகழ்வு புதுச்சேரி
மஞ்சள் நீராட்டு விழாவில் காணப்பட்டது.
சுப விழாக்களில் பழம்,இனிப்பு,அலங்கார பொருட்கள் போன்றவை சீர் வரிசையில் இருக்கும் ஆனால் வில்லியனூரில் இன்று நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் புதுவிதமாக நெல் ரகங்களின் வரிசை தட்டு வைக்கப்பட்டிருந்தது.
சுகாதார துறையில் பணியாற்றும் சிவக்குமார்- தனலட்சுமி தம்பதியரின் மகள் அனுபிரதாவின் மஞ்சள் நீராட்டு விழாவில் தான் இந்த வித்தியாசமான தட்டு வரிசை வைக்கப்பட்டது. இதனை தாய்மாமனாக ஐய்யனார் வழங்கினார்.இவரும் சுகாதார துறையில் பணியாற்றுகிறார்.
480 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து அவற்றின் பெயர்களோடு பாக்கெட் போட்டு தாய்மாமன் சீர்வரிசையாக கொடுத்தார். நெல் ரகங்களின் சீர் தட்டுக்கள் உறவினர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
