உலக அளவுல அதிக வசூல் பண்ணுன தமிழ் படங்கள்
இந்த வருஷம் பெரிய ஹீரோக்கள் மட்டுமில்லாம, பிரதீப் ரங்கநாதன் மாதிரியான வளர்ந்து வர்ற ஹீரோக்களும், சசிகுமார் மாதிரியான மினிமம் கோரண்டி ஹீரோக்களும் வசூல்ல மிரட்டியிருக்காங்க.
1) கூலி
விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், கல்லா கட்டுறதுல நம்ம தலைவர் அடிச்சுக்க ஆளே இல்லை: நம்பர் 1 இடம்: இந்த 2025-ம் வருஷத்துல வெளியான தமிழ் படங்கள்லயே, உலக அளவுல அதிக வசூல் பண்ணுன படங்கள் லிஸ்ட்ல ‘கூலி’ தான் முதலிடம்.
உலக அளவுல இந்தப் படம் சுமார் ₹518 கோடி வரைக்கும் வசூலை அள்ளிக் குவிச்சிருக்கு .ரஜினி சாரோட அந்த ஸ்டைலும், லோகேஷோட மேக்கிங்கும் சேர்ந்து ‘கூலி’யை இந்த வருஷத்தோட மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டா மாத்திருக்கு.
2. குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்துல அஜித் நடிச்ச இந்தப் படம், பழைய அஜித்தோட ரெபரன்ஸ் சீன்ஸ்னால ரசிகர்களுக்குப் பெரிய ட்ரீட்டா அமைஞ்சது. விஜய் படம் இல்லாத குறையை இந்தப் படம் தீர்த்து வச்சதுன்னே சொல்லலாம். இப்படம் ரூ.248.25 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
3. டிராகன்
வெறும் 37 கோடி பட்ஜெட்ல உருவான இந்தப் படம் 150 கோடி வசூல் பண்ணி எல்லாருக்கும் ஒரு பெரிய ஷாக் கொடுத்துச்சு. பிரதீப் ரங்கநாதன் இப்போ தமிழ் சினிமாவோட ‘வசூல் மன்னன்’ லிஸ்ட்ல சேர்ந்துட்டாரு.
4. விடா முயற்சி
ரொம்ப வருஷமா ரிலீஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த அஜித் ரசிகர்களுக்கு பிப்ரவரி மாசம் இந்தப் படம் ஒரு பெரிய விருந்தா அமைஞ்சது. கலவையான விமர்சனம் வந்தாலும், அஜித்துக்காகவே ரசிகர்கள் தியேட்டருக்குப் போய் பாத்தாங்க. மேலும், உலகளவில் மொத்தம் ரூ.138 கோடி வசூலித்ததாக, படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
5) டியூட்
ஏற்கனவே ‘லவ் டுடே’, ‘டிராகன்’னு ரெண்டு பெரிய ஹிட் கொடுத்த பிரதீப், இப்போ இந்தப் படம் மூலமா ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு பண்ணியிருக்காரு.
இந்தப் படம் ரிலீஸ் ஆன கொஞ்ச நாள்லயே 100 கோடி கிளப்ல சேர்ந்துருச்சு. மொத்தமா உலக அளவுல ₹113 கோடி வசூல் பண்ணி சாதனை படைச்சிருக்கு.
6.மதராசி
அமரன்’ ஹிட்டுக்கு அப்புறம் வந்த படம்ங்கிறதாலயும், முருகதாஸ் படம்ங்கிறதாலயும் ரசிகர்கள் மத்தியில இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்துச்சு. ரொம்ப ஆவலா காத்துட்டு இருந்த ரசிகர்களுக்கு, இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ‘மாஸா’ அமையாதது கொஞ்சம் ஏமாற்றத்தைத் தான் தந்திருக்குன்னு சினிமா வட்டாரத்துல பேசுறாங்க. ரொம்ப பெரிய பட்ஜெட்ல எடுக்கப்பட்ட இந்தப் படம், வேர்ல்டு வைடு மொத்தமாவே ₹99.12 கோடி தான் வசூல் பண்ணியிருக்கு.
7.ரெட்ரோ
சூர்யாவோட இந்த ‘ரெட்ரோ’. இந்தப் படத்து மேல ரசிகர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. நூறு கோடியைத் தொட இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருந்துச்சு. விமர்சனங்கள் அப்படி இப்படின்னு இருந்தாலும், சூர்யாவோட ஸ்டார் வேல்யூவால உலக அளவுல இந்தப் படம் ₹97.35 கோடி வசூல் பண்ணியிருக்கு.இருந்தாலும் கங்குவா-வோட தோல்வியோடு ஒப்பிடும்போது, இது சூர்யாவுக்கு ஒரு நிம்மதியான வசூல்ன்னே சொல்லலாம்.
8.டூரிஸ்ட் பேமிலி
சசிகுமார் கூட சேர்ந்து ஒரு காலத்துல கனவுக்கன்னியா இருந்த சிம்ரன் நடிச்சிருந்தாங்க. இவங்க ரெண்டு பேரோட காம்போ புதுசாவும், ரொம்ப எதார்த்தமாவும் இருந்தது மக்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.
வெறும் ₹7 கோடி தான். (இப்போ இருக்குற சினிமாவுக்கு இது ரொம்ப கம்மி). ஆனா வேர்ல்டு வைடு இந்தப் படம் சுமார் ₹86 கோடி வரைக்கும் கல்லா கட்டியிருக்கு!போட்ட காசை விட 12 மடங்குக்கும் மேல லாபம் கொடுத்ததுனால, இது இந்த வருஷத்தோட ஒரு மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ படமா அமைஞ்சிருக்கு.
9.தலைவன் தலைவி
விஜய் சேதுபதி செம பிஸியா இருக்குற இந்த நேரத்துல, அவரோட 52-வது படமா உருவானதுதான் ‘தலைவன் தலைவி’.போன ஜூலை மாசம் இந்தப் படம் தியேட்டருக்கு வந்துச்சு.
ரிலீஸ் ஆனதுல இருந்து மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வர ஆரம்பிச்சது. வேர்ல்டு வைடு இந்தப் படம் ₹85 கோடிக்கும் மேல வசூல் பண்ணி ஒரு பெரிய ஹிட்டடிச்சிருக்கு. விஜய் சேதுபதிக்கு இது ஒரு முக்கியமான வெற்றி, ஏன்னா கமர்சியல் படங்களுக்கு நடுவுல இந்த மாதிரி ஒரு அழகான குடும்பப் படம் அவருக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்திருக்கு.
10.மாமன்
சூரி ஒரு ‘சீரியஸ்’ ஹீரோவா செம ஃபார்ம்ல இருக்காரு. அந்த வரிசையில பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்துல வெளியான ‘மாமன்’ படம் சூரியோட நடிப்புக்கு இன்னொரு மகுடமா அமைஞ்சிருக்கு.இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில கிடைச்ச நல்ல ‘மவுத் டாக்’ (Mouth Talk) காரணமா, தியேட்டர்ல நல்லா ஓடுச்சு. உலக அளவுல இந்தப் படம் மொத்தம் ₹41.15 கோடி வசூல் பண்ணியிருக்கு. இதனாலதான் 2025-ல அதிக வசூல் செஞ்ச படங்கள் லிஸ்ட்ல இது 10-வது இடத்தை கெத்தா பிடிச்சிருக்கு.


