தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு பாய்மர படகு பயிற்சி மையம்
நாகையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு பாய்மர படகு பயிற்சி மையத்தை தமிழக துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டம் கடற்கரை சார்ந்ததாகவும், கடல் வளத்தினை சார்ந்ததாகவும் காணப்படுகிறது.
இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் பள்ளிக்கூட மாணவ மாணவிகள். பயன்பெறும் வகையில் பாய்மர படகு குழாம் பயிற்சிமுகாமினைமாநில துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தப் பாய்மர படகு பயிற்சி முகாமில் 10 வயது முதல் 15 வயது வரையிலான பள்ளிக்கூட மாணவ மாணவிகள் பயிற்சி பெற முடியும். இந்த பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் இலவசமாக பயன்பெறலாம்.
இந்த பயிற்சியானது வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மாணவிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பிரத்தியோகமாக சென்னையில் இருந்து பயிற்சி பெற்ற சிறப்பு பயிற்சியாளர்கள் நாகையில் முகாமிட்டுள்ளனர். இதற்காக தற்போது ஐந்து படகுகள் நாகை துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பாய்மரப்படகுகள் பயிற்சிக்காக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


