அனகோண்டா படத்தின் Final பார்ட் வரும் டிசம்பர் 25-ஆம் தேதி
1997-ல ஜெனிபர் லோபஸ் நடிச்சு வந்த அந்த முதல் ‘அனகோண்டா’ படம் ஞாபகம் இருக்கா?
அப்போ விமர்சனங்கள் கொஞ்சம் சுமாராவே இருந்தாலும், வேர்ல்டு வைடு வசூல்ல அந்தப் படம் சும்மா பிச்சுகிட்டு போச்சு.
அந்தப் படத்தோட வெற்றியைத் தொடர்ந்து 2004-ல ரெண்டாவது பாகம் (‘தி ஹண்ட் ஆப் தி ப்ளட் ஆர்கிட்’) வந்துச்சு.
அதுக்கப்புறம் 2008, 2009, 2015-னு வரிசையா மூணு படங்கள் எடுத்தாங்க. ஆனா, அந்தப் படங்கள் எல்லாம் பழைய படம் மாதிரி மக்கள் மனசுல நிக்கல, பெருசா ஜெயிக்கவும் இல்லை.
இப்போ சோனி பிக்சர்ஸ் (Sony) அந்த அனகோண்டா பிரான்சைஸை மறுபடியும் புதுசா தூசு தட்டி எடுக்க முடிவு பண்ணிருக்காங்க.
‘தி அன்பெயரபிள் வெயிட் ஆப் மாஸிவ் டேலண்ட்’ படத்தை இயக்கிப் புகழ் பெற்ற டாம் கோர்மிகன் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்காரு.
இதுல நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஆண்ட் மேன் (Ant-Man) நடிகர் பால் ரூட் மற்றும் ஜுமான்ஜி (Jumanji) நடிகர் ஜாக் பிளாக் ரெண்டு பேரும் முக்கிய ரோல்ல நடிச்சிருக்காங்க.
இவங்க ரெண்டு பேருமே காமெடிக்கும் ஆக்ஷனுக்கும் பேர் போனவங்க, அதனால படத்துல எண்டர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சமே இருக்காது! ஏற்கனவே இந்தப் படத்தோட டிரைலர் வெளியாகி ரசிகர்களோட எதிர்பார்ப்பை எகிற வச்சிருக்கு.
இப்போ படம் ரிலீஸாகப் போற நேரத்துல, ஒரு புது ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கு.
இது இப்போ சோசியல் மீடியால செம வைரல்! இந்தப் படம் வர்ற டிசம்பர் 25-ஆம் தேதி (கிறிஸ்துமஸ் ஸ்பெஷலா) தியேட்டருக்கு வரப்போகுது.


