in

காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

 

காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவின் நான்காம் நாள் ரிஷப வாகனத்தில் சிவலிங்க பூஜை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காரைக்கால் அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசிவகாமி அம்மன் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தான தங்க மாரியம்மன் ஆலயத்தில் கொடியேற்றம் 27ஆம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து நான்காம் நாள் தங்க மாரியம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனத்தில் தங்க மாரியம்மன் சிவலிங்க பூஜை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக சிறப்பு அபிஷேகமும அதனை தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் தங்க மாரியம்மன் சிவலிங்கத்தை பூஜை செய்யும் அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா மே-05ம் தேதி நடைபெற உள்ளது.

What do you think?

3 மணி நேரம் நடு ரோட்டில் நின்ற பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா பூத மற்றும் அன்ன வாகனம்