மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 184 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 89 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செய்தார்
தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 184 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 89 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மாநகராட்சி மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வழங்கினார்கள்.

இவ்விழாவில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 150 பயனாளிகளுக்கும், நியோ போல்ட் நவீன சக்கர நாற்காலி 24 பயனாளிகளுக்கும், மின்கலன் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி 10 பயனாளிகளுக்கு என மொத்தம் 184 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


