‘ஜனநாயகன்”தலையெழுத்தை மாத்தப்போகும் நாள்! நாளைக்குத் தான் மெயின் கிளைமாக்ஸ்
தளபதி விஜய் ரசிகர்களுக்கு இப்போ ஒரு முக்கியமான அப்டேட் கிடைச்சிருக்கு. எச். வினோத் டைரக்ஷன்ல விஜய் நடிச்சிருக்க ‘ஜனநாயகன்’ படம், ரிலீஸாகாம ரொம்ப நாளா சென்சார் போர்டு பிடியில சிக்கித் தவிச்சுட்டு இருக்கு. இப்போ அந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரப்போகுது!ஆக்சுவலா இந்தப் படம் பொங்கலுக்கே ரிலீஸ் ஆகியிருக்கணும்.
ஆனா, படத்துல இருக்குற ஆர்மி சம்பந்தப்பட்ட சீன்ஸ் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துற மாதிரி சில காட்சிகள் இருக்குன்னு சொல்லி சென்சார் போர்டு தடையை போட்டுட்டாங்க.
கோர்ட், கேஸ்னு போன KVN புரொடக்ஷன்ஸ், இப்போ கேஸை வாபஸ் வாங்கிட்டு நேருக்கு நேரா சென்சார் போர்டு கூட மோதத் தயாரா இருக்காங்க.
நாளைக்கு (மார்ச் 17) மும்பையில இருக்குற தணிக்கை வாரியத்தோட மறு ஆய்வுக் குழு (Review Committee) இந்தப் படத்தைப் பார்க்கப்போறாங்க. அங்க இருக்குற அதிகாரிகள் படத்தைப் பார்த்துட்டு கிரீன் சிக்னல் கொடுத்தா மட்டும் தான் படம் தியேட்டருக்கு வரும்.
நாளைக்கு மும்பையில பாசிட்டிவ் ரிசல்ட் வந்தா, தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) இல்லனா ஏப்ரல் 30-ல படம் ரிலீஸாக வாய்ப்பு இருக்கு. ஒருவேளை சென்சார் போர்டு இன்னும் நிறைய கட்ஸ் (Cuts) சொன்னாங்கன்னா, தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் அப்புறம் அதாவது மே 4-க்குப் பிறகு தான் படம் வெளியாகும்னு சொல்றாங்க.
விஜய்யோட அரசியல் என்ட்ரிக்கு முன்னாடி வர்ற கடைசிப் படம் இதுங்கிறதால, ரசிகர்கள் இப்போ மும்பையில இருந்து வர்ற ரிசல்ட்டுக்காக நகத்தைக் கடிச்சுக்கிட்டு காத்துட்டு இருக்காங்க. நாளைக்கு வர்ற அந்த ஒரு முடிவு தான் ‘ஜனநாயகன்’ படத்தோட தலையெழுத்தை மாத்தப்போகுது!

