in

படைத்தலைவன்…. தடுமாறும் அரைகுறை தலைவன் ….Movie Review


Watch – YouTube Click

படைத்தலைவன்…. தடுமாறும் அரைகுறை தலைவன் ….Movie Review

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் Sagaptam (சகாப்தம்) படத்தின் முலம் அறிமுகமானவர்.

ஏழு ஆண்டுகளுக்கு பின் படைத்தலைவன் படத்தில் நடித்துள்ளார்.

சண்முக பாண்டியன் வேலுவாகவும், இயக்குனர்- நடிகர் கஸ்தூரி ராஜா வெள்ளைசாமியாகவும் நடித்திருகின்றனர்.

வழி தவறி வந்த குட்டி யானையை மணியன் என்று பெயரிட்டு பிள்ளை போல செல்லமாக வளர்த்துவருகிறார் வேலுவின் அம்மா. யானையுடனான உணர்ச்சிப் பிணைப்பை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

மணியன் எதிர்பாராத விதமாக பலறார் காயப்படுத்தும் போதும், யாரால் எதனால் மணியனுக்கு ஆபத்து மணியனை வேலு எப்படி காப்பற்றினார் என்பதே மீதி கதை.

தீடிரென்று யானையை அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாமுக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க வழிவகுக்கிறது. மணியன் மர்மமான முறையில் முகாமிலிருந்து மறைந்து போகும் போது, ‘படை தலைவன்’. வேலு, தனது அன்புக்குரிய மணியை தேடி காடுகள் மற்றும் மலைகள் வழியாக சளைக்காத பயணத்தைத் தொடங்கி ஒரிசாவில் கதை முடிகிறது.

சண்முக பாண்டியன் அதிரடி காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார், உணர்ச்சிவசப்பட்டும் காட்சிகளில் பயிற்சி தேவை. விஜயகாந்த் அவர்கள்’ அளவிற்கு நடிக்கவில்லை என்றாலும் ஷண்முக பாண்டியனை ஏற்றுகொள்ளலாம்.

‘பொட்டு வச்சா தங்கக்கூடம்’ பாடல் ரசிக்கலாம். ஷண்முக பாண்டியன் உடல் வலிமை மற்றும் ஆற்றல் ஆகியவை படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த் மற்றும் அருள்தாஸ் , பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் யாமினி சந்தர், ஆகியோர் தங்கள் பங்களிப்பை கொடுத்திருகிறார்கள்.

அறிமுக இயக்குனர் U.அன்பு பழைய கதையை அவரது பாணியில் கொடுத்திருக்கிறார். வேலுவுக்கும் மணியனுக்கும் இடையிலான பாச பிணைப்பை அருமையாக சித்தரித்ததில் திருப்தி யடையலாம்.

ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான அழகான மற்றும் துடிப்பான உறவிலிருந்து, சமூகதிற்கு Msg சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் கதை நன்றாக இணைக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் பாதி வலுவான திரைகதை இல்லாமல் சிக்கி தவிக்கிறது’.

வேலு எப்படி ஒடிசாவை அடைகிறார் என்பதற்கு சரியான விளக்கங்கள் இல்லை. AI டெக்னாலஜி முலம் மறைந்து விஜயகாந்த் அவர்களை திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தனர்.

செயற்கை நுண்ணறிவுத் தோற்றம் திரைக்கதையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பதை டைடில் கார்டில் மட்டுமே தெரிந்து கொள்ளலாம்.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை மனதை தொடவில்லை. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமரா கிராமத்து பகுதிகளை அழகாக படம் பிடித்திருகிறது.

உணர்ச்சிகரமான கதை ஆனால் சீரற்ற எழுத்து மற்றும் கதாபாத்திர தொழ்வு திரைகதையில் அழுத்தம் இல்லாததால் படை தலைவன் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

What do you think?

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி

புதிய கடை திறந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்