சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், கை, கால், தலை துண்டித்த நிலையில் கிடப்பதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அத்திப்பட்டு கிராம பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் கை, கால், தலை, துண்டான நிலையில் ஆண் சடலம் கிடந்ததால் கொலையா அல்லது பழைய கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு முதலைகள் உலா வருவதால் முதலை கடித்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்து போனவரின் சடலத்தை மீட்ட போலீசார் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கை, கால், தலை, துண்டான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வனத்துறை அதிகாரிகளும் முதலை கடித்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

