in

மாலை சக்கரம் இல்லாத அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரில் அழகு நாச்சியம்மன்

மாலை சக்கரம் இல்லாத அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரில் அழகு நாச்சியம்மன்

 

கும்பகோணம் அருகே நாகரசம்பேட்டையில் பிரசித்தி பெற்ற அழகு நாச்சியம்மன், ஆலயத்தில் 4 டன் எடையுள்ள தூக்கு தேரை 15 நாட்கள் விரதமிருந்து 300 மேற்பட்டோர் தோளில் சுமந்து 6 கிலோ மீட்டர் தூரம் வீதிகளிலும், விளைநிலங்களிலும் தூக்கிச் சென்றனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாகரசம்பேட்டையில் புகழ்மிக்க அழகு நாச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ள ஆலயத்தில் ஆண்டு தோறும் தூக்குதேர் பெரும் விழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு கடந்த 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.

இதனை அடுத்து நாள்தோறும் ஸ்ரீகாயத்திரி அம்மன் அலங்காரம், வைஷ்ணவ அலங்காரம், பார்வதி அலுங்காரம் மகஷ்ன அலங்காரம் என நாள்தோறும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கு தேர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதையொட்டி மாலை சக்கரம் இல்லாத அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரில் அழகு நாச்சியம்மன் எழுந்தருளினார்.

4டன் எடையுள்ள இந்த தூக்கு தேரை 15 நாட்கள் விரதமிருந்து வந்த 300 மேற்பட்டோர் தோளில் சுமந்து கீழகாட்டு இருப்பு, கீழவிசலூர், நாகரசம்பேட்டை ஆகிய பகுதிகளில் 6 கிலோ மீட்டர் தூரம் வீதிகளிலும், விளைநிலங்களிலும் கடந்து தூக்கு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வந்திருந்து சுவாமியை வழிப்பட்டனர்.

What do you think?

இனிமேல் நடிக்க முடியுமா தெரியவில்லை.. Samantha

ஸ்ரீதேஜா..வை மருத்துவமனைக்கு காண சென்ற அல்லு அர்ஜுன் அப்பா