செப்பரை அழகிய கூத்தருக்கு வைகாசி திருவாதிரை திருமஞ்சனம்
செப்பரை அழகிய கூத்தருக்கு வைகாசி திருவாதிரை திருமஞ்சனம். ஏராளமான பொதுமக்கள் தாிசனம்.
தாமிரபரணி நதிக்கரையில் செப்பரை என்ற ஊாில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ அழகிய கூத்தா் (நடராஜா்) திருக்கோவில். இங்கு மூலவராக நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அருள்பாலிக்கின்றனா்.
தமிழ் நாட்டில் சிதம்பரம் மற்றும் நெல்லை அருகே அமைந்துள்ள அழகிய கூத்தா் (நடராஜா்) திருக்கோவில்களில் மட்டுமே கொடிபட்டம் கட்டி 10 தினங்கள் உற்சவம் நடைபெறுகின்றது.
ஹிரண்யவர்மன் என்கிற சோழ மன்னனின் காலத்தில் செய்யப்பட்டது இங்கு உள்ள நடராஜா் திருஉருவம். இந்த நடராஜ மூர்த்தியின் அழகினைக் கண்டு, மன்னன் அழகிய கூத்தர் என உருகினான். அதுவே இறைவனின் திருப்பெயராக விளங்கி நின்றுவிட்டது.
ஆடல் வல்லானாகிய செப்பரை நடராஜருக்கு வைகாசி திருவாதிரை திருமஞ்சனம் இன்று மதியம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சங்கு மற்றும் நவகலசங்கள் கொண்டு பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து சபை நடுவில் ஏழுந்தருளிய ஸ்ரீ நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் மாபொடி, மஞ்சள், வாசனைபொடி, பால், தயிா், தேன், பஞ்சாமிருதம், அன்னம், இளநீா், வீபூதி, சந்தணம் போன்ற 16 வகையான அபிஷேகப் பொருள்கள் கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

தொடா்நது கலசங்கள் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு சங்கு அபிஷேகமும் அதனை தொடா்நது மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் நடராஜரை கா்ப்பகிரஹத்தில் எழுந்தருளசெய்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி சோடச உபசாரங்கள் நடைபெற்றன. அதனை தொடா்ந்து அா்ச்சனை வேத பாராயணம் பஞ்ச புராணம் பாடி கற்பூர ஆரத்தி நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதமாக அன்னம் பஞ்சாமிருதம் வழங்கப்பட்டது.


