மயிலாடுதுறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 32 ஆம் ஆண்டு துவக்க தினம்
மயிலாடுதுறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 32 ஆம் ஆண்டு துவக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது மாவட்ட செயலாளர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அண்ணா சிலை அருகில் ம.தி.மு.க வின் 32 ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் கொளஞ்சி முன்னிலை வகித்தார்.
அப்போது பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் கூடிய அன்னதானமும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மதிமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அழகிரி உள்ளிட்ட ஏராளமான ம.தி.மு.க பொருப்பாளர்களும். தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.