12ம் ஆண்டு ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் அமர்நாத புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவிலில் பன்னிரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் அமர்நாத் புதூர் கிராமத்தில் ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து கோவில் புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் முடிவு பெற்று நேற்று முன்தினம் கோயில் அருகே யாகசாலைகள் அமைக்கப்பட்டது. முதல் கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று கோ பூஜை மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாக சாலையில் பூர்ணாகதி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தலையில் சுமந்து சென்று ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் வழிபட்டனர்.


