in

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு

 

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் 987 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பேட்டி தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 1-ந் தேதி,ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் கீழடி புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கான நிதி மறுப்பு, நீட் போன்ற நியாயமற்ற தேர்வுகள், கூட்டாட்சித் தத்துவம் சிதைப்பு மற்றும் நமது அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறை சதி என தமிழ்நாட்டின் மண், மொழி, மற்றும் மானத்தின் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் தொடங்கப்பட்டதுதான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு ஆகும்.

இலக்கை தாண்டி உறுப்பினர்கள் சேர்ப்பு
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது முதல் தஞ்சை மத்திய மாவட்டத்தில் உள்ள திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு தொகுதிகளில் மட்டும் 95 ஆயிரம் குடும்பங்களை சந்தித்து 3 லட்சத்து 50 ஆயிரத்து 987 உறுப்பினரக்ளை சேர்த்துள்ளோம். இதில் தஞ்சை தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேரும், திருவையாறு தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 936 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 605 பேரும் சேர்த்துள்ளாம். தஞ்சை மத்திய மாவட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இணைக்கப்பட்ட குடும்பங்கள் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க அணி திரண்டுள்ளனர். இந்த நிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி தஞ்சை மத்திய மாவட்டத்தில் உள்ள 896 வாக்குச்சாவடிகளிலும் ஒன்று கூடி தமிழ்நாட்டை காக்கும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஓரணியில் தமிழ்நாடு கூட்டம்.

அதைத்தொடர்ந்து வருகிற 17-ந்தேதி கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இருந்து திரளானோர் பஸ், வேன்களில் சென்று கலந்து கொள்கிறார்கள். அதைத்தொடர்ந்து வருகிற 20, 21-ந்தேிகளில் மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான கூட்டம் நடபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

What do you think?

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆவணி பெருவிழா தேரோட்டம்

திருக்கோவிலூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி அண்ணா சிலைக்கு மரியாதை