in

தஞ்சை ஹெல்மெட் விழிப்புணர்வு பராசக்தி திரைப்பட டிக்கெட்

தஞ்சை ஹெல்மெட் விழிப்புணர்வு பராசக்தி திரைப்பட டிக்கெட்

 

ஹெல்மெட் போட்டு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு விலையில்லாமல் இரண்டு லிட்டர் பெட்ரோல், ஒருவருக்கு 3 டிக்கெட் வீதம் 50 பேருக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வர உள்ள பராசக்தி திரைப்படத்திற்கான டிக்கெட் கொடுத்து ஹெல்மெட் அணிந்தவர்களை மோட்டிவேட் செய்து அதிர்ச்சி தந்த விழிப்புணர்வு நிகழ்வு தஞ்சையில் நடைப்பெற்றது.

தஞ்சையில் மாநகர காவல்துறை தனியார் அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து பல பரிசுகள் வழங்கி தொடர்ந்து ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தி வருகிறது.

இதன் காரணமாக 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிய துவங்கி உள்ளனர்.

100 சதவீதமாக உயர்த்த மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்

தனியார் தொண்டு நிறுவனம், தஞ்சை ஆற்று பாலம் ரவுண்டானா பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி இந்தாங்க பிடிங்கனு சொல்லி சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வர உள்ள பராசக்தி திரைப்படத்திற்கான டோக்கனை வழங்கினார்கள்.

அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள் விலையில்லாமல் இரண்டு லிட்டர் பெட்ரோல் போட்டு அனுப்பி வைத்தனர்.

ஒவ்வொருவருக்கும் தலா 3 டிக்கெட் வீதம் 50 பேருக்கு வழங்கப்பட்டது.

இது எங்களை மோட்டிவேட் செய்யும் விதமாக இருந்தது என இரு சக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

What do you think?

கரும்பிற்கு அரசு அறிவித்துள்ள விலை முழுமையாக கிடைப்பதில்லை என கரும்பு விவசாயிகள் குற்றச்சாட்டு

‘ஜனநாயகன்”சஸ்பென்ஸ் த்ரில்லர்’ படம் மாதிரி கோர்ட்ல ஓடிக்கிட்டு இருக்கு – ‘ஜனநாயகன்’