in

பெருமாள் ஆலயத்தில் தை மாத தேர்த்திருவிழா- 5 – நாள் ஷேச வாகனத்தில் திருவீதி உலா 

பெருமாள் ஆலயத்தில் தை மாத தேர்த்திருவிழா- 5 – நாள் ஷேச வாகனத்தில் திருவீதி உலா 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் திருத்தேர் திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.‌.‌

எம்பெருமான்19- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும்,  தினந்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷ வாகனம், யாணை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன்படி 22-ஆம் தேதி நேற்று இரவு ஷேச வாகனத்தில் எழுந்தருளினார் அப்போது எம்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனையும் தீப தூப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்ட பின் திருவீதி உலா புறப்பாடு மிக விமர்சையாக மங்கள இசையுடன் நடைபெற்றது

அப்போது பக்தர்கள் வழிநெடுக தேங்காய் பழம் உடைத்து பெருமாளை வழிபாடு செய்தனர் மேலும் வரும் 24- ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு புஷ்ப விமான புறப்பாடும், 25- ஆம் தேதி ராஜமுடி சேவை மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

25- ஆம் அதிகாலை 5.30 முதல் 6.30- க்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் மாலை 4.30 மணிக்கு திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

27- ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை வராக புஷ்கரணியில் தீர்த்தவாரியும், திருமஞ்சனம், வசந்த உற்சவமும் மற்றும் கருட வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் திருத்தேர் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

What do you think?

நான்காம் படை வீடான சுவாமிமலையில் தைப்பூசத்தை திருவிழாவிளையொட்டி, இன்று கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது 

தஞ்சையில் தொலைந்துபோன, திருட்டு போன 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஒப்படைத்தார்