கொட்டும் மழையிலும் நடந்த கோயில் திருவிழா
புதுச்சேரி காலையில் கடும் வெயில்.. இரவில் இடி மின்னலுடன் கனமழை..
கொட்டும் மழையிலும் நடந்த கோயில் திருவிழா…
புதுச்சேரியில் ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இருப்பினும் திடீரென கடந்த 3 ம்தேதி அதிகாலையில் ஒரு மணி நேரமும் இரவு ஒரு மணி நேரம் லேசான மழை பெய்தது.
கத்திரி வெயில் தூங்குவதற்கு முன்பாகவே புதுச்சேரியில் வெயில் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. புதுச்சேரியில் முதல் முறையாக கடந்த 12ம் தேதி அதிகபட்சமாக 100.4 டிகிரி பாரன்ஹூட் வெயில் பதிவாகியது.
இதனையடுத்து கத்திரி வெயில் துவங்கிய 4ம் தேதி புதுச்சேரியில் அதிகபட்சமாக 100.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இது நடப்பு கோடை சீசனில் பதிவான அதிகபட்ச வெயில் ஆகும்.
இந்த நிலையில் அன்று மாலை குளிர்ந்த புதுச்சேரி முழுவதும் காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று கடும் வெப்ப அலை வீசியது. 98.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியது.
மாலை வரை கடும் வெயில் காற்று வீசிய நிலையில் இரவு திடீரென பலத்த காற்று வீசியது. நகரத்தில் பல இடங்களில் இருந்த பஞ்சு மரத்தில் இருந்து பஞ்சு வெடித்து சாலை முழுவதும் ஆகிரமிக்க வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து இரவு 11 மணி முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது..
புதுச்சேரியை அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவ சுவாமி வீதி உலா வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் கனமழை காரணமாக வான வேடிக்கை நிறுத்தப்பட்டு கொட்டும் மழையில் வீதியுலா நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் இளைஞர்கள் திடீர் மழையை வரவேற்று மழையில் ஆட்டம் போட்டு சாமி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.