பள்ளியில் மாணவர்களை வைத்து குடிநீர் தொட்டிக்கு கீழே சுத்தம் செய்யும் ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை வைத்து குடிநீர் தொட்டிக்கு கீழே சுத்தம் செய்யும் ஆசிரியர்….
தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை….
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களை வைத்து குடிநீர் தொட்டியின் கீழே உள்ள பாசி மற்றும் குப்பைகளை அகற்றி வரும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் வளாகத்தில் மழைநீர் தேங்கியும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவான சூழல் இல்லாத வகையிலும் உள்ளது.
மேலும் பள்ளியின் மூன்றாம் தளத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கீழே உள்ள பாசி மற்றும் குப்பைகளை பள்ளியில் பயிலும் மாணவர்களை வைத்து ஆசிரியர் ஒருவர் அகற்றி வரும் அவல நிலை பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து ஆசிரியரிடம் கேட்ட போது அவர் சமூக முன்னேற்ற சேவை செய்கின்றோம் என்று கூறியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்களை வைத்து சுத்தம் செய்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


