in

சங்கராணேஸ்வரர் கோவில்கள் திருப்பணிகளை தமிழக முதல்வர் துவங்கி வைத்தார்

சங்கராணேஸ்வரர் கோவில்கள் திருப்பணிகளை தமிழக முதல்வர் துவங்கி வைத்தார்

 

தரங்கம்பாடி அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கராணேஸ்வரர் கோவில்கள் ரூ 41,50.000 மதிப்பில் திருப்பணிகளை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் துவங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த தலச்சங்காடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு சங்கராணேஸ்வரர் சுவாமி திருக்கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை சார்பாக ரூ 41,50.000 நிதி ஒதுக்கி திருப்பணிகள் செய்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திருப்பணிப் பணிகளை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திருப்பணிகளில் கலந்து கொண்டனர்.

What do you think?

வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தம்

பெற்றோரின் நினைவாய்… ஒரு பிரம்மாண்ட ஆலயம்!