உபரி நீர் முழுவதுமாக தமிழக பகுதிகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக உபரி நீர் முழுவதுமாக தமிழக பகுதிகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கும் மேற்பட்ட உபரி நீர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், பெரம்பட்டு அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம்,மேல திருக்கழிப்பாலை வழியாக கொடியம்பாளையம் கடல் முகத்துவாரத்தில் துறைமுகம் முகத்துவாரம் வழியே பயனற்று கடலில் கலந்து வருகிறது.

இது குறித்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர்செல்லும் காட்சிகள் டிரோன் படக் காட்சிகள் அனுப்பப்பட்டுள்ளது…


