in

வக்பு வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு

வக்பு வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு

 

வக்பு வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது ; ஜம்மியத் உலமா ஹிந்த் அமைப்பின் மாநில செயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன் Ex MLA பேட்டி

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்த இடைக்கால தீர்ப்பு இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஜம்மியத் உலமா ஹிந்த் அமைப்பின் மாநில செயலாளருமான எம் ஜி கே நிஜாமுதீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில் ; வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்கால தீர்ப்பு வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது என்று கூறினார்.

வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியவர், ஒன்றிய வக்பு வாரியத்தில் நான்கு முஸ்லிம் அல்லாதவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினால் இதே போல மற்ற மதத்தை சேர்ந்த அமைப்பில் இந்து அல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வார்களா என்று கேள்வி எழுப்பினார்.

திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளில் மதத்தை சார்ந்தவர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக அரசு சேர்க்குமா என்று கேள்வி எழுப்பிய அவர், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான தீர்ப்பை இஸ்லாமிய மக்கள் ஏற்றுக் கொண்ட நிலையிலும் வக்பு வாரிய விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் இப்படி நடப்பது ஏற்புடையதல்ல என்றார்.

வக்பு வாரியத்திற்கு நிதியுதவி அளிக்க விரும்பும் நபர் இஸ்லாமியராக மாறி ஐந்து வருடம் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்த எம் ஜி கே நிஜாமுதீன், இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கூறினார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒரு அரசியல் கட்சியை ஒரு சமயத்தை சார்ந்து செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது என்று கூறினார்.

What do you think?

ஶ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

உருளைக்கிழங்கு மூட்டை திருடி சென்றது குறித்து சிசிடிவியில் ஆய்வு