பராசக்தி படத்தைப் பார்த்துட்டு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு
ஜனவரி 10-ஆம் தேதி வெளியான ‘பராசக்தி’ படம், ஆரம்பத்துல சில கலவையான விமர்சனங்களைச் சந்திச்சாலும், இப்போ ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில நல்ல வரவேற்பைப் பெற்று வருது.
1959-ல நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமா வச்சு இந்தப் படம் உருவாகியிருக்கு.
அந்த காலத்து மாணவர் போராட்டத்தையும், மொழி உணர்வையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துனதுக்காகப் படக்குழுவுக்குப் பாராட்டுகள் குவியுது.
இந்தப் படத்துக்குப் பிளஸ் பாயிண்டே ஜி.வி. பிரகாஷின் இசைதான். இது அவருடைய 100-வது படம்ங்கிறதுனால ரொம்ப ஸ்பெஷலா மியூசிக் போட்டிருக்காரு.
எஸ்கே கூட அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் வில்லனா மிரட்டியிருக்கிற ரவி மோகன்னு ஸ்டார் காஸ்ட் பலமா இருக்கு.
படம் ரிலீஸ் ஆகி வெறும் 2 நாள்ல ரூ. 51 கோடி வசூல் செஞ்சிருக்கிறதா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க.
இதைக் கொண்டாடுறதுக்காக சென்னையில நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவுல எஸ்கே ரொம்ப உருக்கமா பேசினாரு: “பராசக்தி படத்துல நடிச்சது என் வாழ்நாள் பெருமை. ரொம்ப சவாலான கேரக்டர்ங்கிறதுனாலதான் இதைத் தேர்ந்தெடுத்தேன்.
“இந்தப் படத்தைப் பார்த்துட்டு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேர்ல போன் பண்ணி எஸ்கே-வை பாராட்டியிருக்காரு. “தலைவரே கூப்பிட்டு பாராட்டிட்டாரு”னு எஸ்கே செம குஷியில அவருக்கு நன்றி சொல்லிருக்காரு.


