in

குயவனுடப்பு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை வழிபாடு

குயவனுடப்பு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை வழிபாடு

 

குயவனுடப்பு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை வழிபாடு நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் வந்தவாசி அருகே குயவனுடப்பு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை வழிபாடு நடைபெற்றது.

இக்கோவிலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை வழிபாடு நடைபெற்றது முன்னதாக சோமசுந்தரி அம்பாளுக்கு பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து மங்களப் பொருட்களான தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு வளையல் மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு கண்ணாடி ரவிக்கை துணி உள்ளிட்டவைகளை வைத்து பெண்கள் கணபதி பூஜை செய்து சுமங்கலி பூஜை வழிபாடு துவங்கினர்.

மகாலட்சுமி அஷ்டோத்திர மந்திரங்கள் போற்றி மந்திரங்கள் கூறி மஞ்சள் அச்சதை மற்றும் உதிரி புஷ்பங்களால் கலசத்திற்கு அர்ச்சனை செய்தனர் நிறைவாக சோமசுந்தரி அம்பாள் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர் பெண்கள் அனைவருக்கும் மங்கள பொருட்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

காந்தாரா: Chapter 1 ருக்மிணி… First லுக் Poster

வரத அய்யனார் திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை