உலக நன்மைக்காக சுமங்கலி பூஜை. 600க்கம் மெற்பட்ட சுமங்கலிப் பெண்கள்கலந்துகொண்டு மலா்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்தனா்
திருநெல்வேலி சங்கா் நகா் ஜெயேந்திரா பள்ளியில் உலக நன்மைக்காக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்ற. அதன் படி உத்ராயண புண்யகாலம் பிறப்பை முன்னிட்டம் தை சப்தமியை முன்னிட்டும் சுமாா் 600 க்கும் மேற்பட்ட சுமங்கலிகள் ஒன்றுகூடி லலிதா சக்ஸ்ரநாம பாராயம் , அா்ச்சனை நடைபெற்றது.
முன்னதாக முதலில் உலக மக்கள் நோய் நொடியின்றி சுபிட்சமாக வாழ சங்கல்பம் செய்யப்பட்டது. அதனை தொடா்ந்து வந்திரந்த சுமங்கலி பெண்களுக்கு மங்கலபொருட்களான பூ, மஞ்சள்,குங்கமம், வஸ்திரம் வழங்கப்பட்டது.
அதனை தொடா்ந்து பூக்களால் அலங்காிக்கப்ட்ட அம்மன் திருமுகத்திற்கு பூக்களால் லலிதா சகஸ்ரநாமஅா்ச்சனை நடத்தப்பட்டது. உடன் சுமங்கலிப் பெண்கள் லிலதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனா். நிறைவாக மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கலந்துகொண்ட பெண்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

