500 பனை விதை நட்டு மாணவர்கள் அசத்தல்
அரசுப் பள்ளியில் நாட்டு நல பணி திட்ட முகம் நிறைவு விழாவில் 500 பனை விதை நட்டு மாணவர்கள் அசத்தல்…..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட முகாம் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற வந்த நிலையில் பருவதம்பூண்டி ஊராட்சியை தேர்ந்தெடுத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முகாம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நிறைவு நாளில் பர்வதம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரையில் நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு மரம் நடுவோம் மழை பெறுவோம் மரம் நடுவோம் மண்வளம் காப்போம் என கோஷங்கள் எழுப்பியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.


