பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு சான்ஸ்…ஸா நயன்..இக்கு எதிராக வலுக்கும் கண்டனம்
(போக்சோ) சட்டத்தின் கீழ் பாலியல் குற்றச்சாட்டில் கைதான நடன இயக்குனர் ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றியதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தயாரிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பனி படத்தில் ஜானி மாஸ்டருடன் இணைந்து விக்னேஷ் சிவன் பணியாற்றியுள்ளார்.
நடன இயக்குனர் ஜானி Lkg படப்பிடிப்பில் அன்பான #விக்னேஷ் சிவனுடன் பணியாற்றினேன். நீங்கள் என் மீது பொழியும் அக்கறை, மரியாதை மற்றும் நம்பிக்கைக்காக உங்களுடன் பணியாற்றுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஜானி மாஸ்டரும் நன்றி கூறி போஸ்ட் செய்திருந்தார்.
ஜாமீனில் வெளி வந்திருக்கும் ஜானி மாஸ்டருக்கு சான்ஸ் கொடுத்ததிற்கு கண்டனம் தெரிவித்த பாடகி சின்மயி,
“பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜானி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஒரு மக்களாக நாம் ‘திறமையான’ குற்றவாளிகளை நேசிப்பதாகத் தெரிகிறது,
மேலும் அவர்களை ஊக்குவித்து அதிகாரப் பதவிகளில் வைத்திருக்கிறோம் என்று போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு சான்ஸ் கொடுப்பது சரியா என்று நெட்டிசன்கள் நயன்..னுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளனர்.


