in

7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை

7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை

 

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

அடுத்த 12 மணி நேரத்தில் தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்.
அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து வடக்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளை கடந்து, வட தமிழ்நாடு புதுச்சேரி, அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள தித்வா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, நாகப்பட்டினம், கடலூர், எண்ணூர் காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எம் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் இன்று 4வது நாளாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டு படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இருண்ட வானிலை காணப்படுகிறது.

What do you think?

சினிமா விநியோகஸ்தர் பிரபாகர் இல்லத் திருமணம்

மழை விட்டும் வடியாத மழை நீரால் விவசாயிகள் வேதனை