சென்னையில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் ராமநாதபுரம் நந்தி தேவர் சிலம்பாட்டக் கழகக் குழு அணியினர் பங்கேற்பு.
சென்னை வானகரம் பகுதியில் அமைந்துள்ளது வேலம்மாள் வித்யாலயா பள்ளி அதற்கு அருகாமையில் அர்ஜுனா ஆர்ச்சரி அகடாமி சார்பில் மாநில அளவில் வில் வித்தை போட்டியானது நடைபெற்றது.

முன்னதாக இந்த போட்டியினை விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் அகடாமியின் நிறுவனர் ராஜேஸ்வரி துவங்கி வைத்தார்.
முன்னதாக( BAR BOW) என்று சொல்லக்கூடிய வில்வித்தை போட்டியானது 6 சுற்றுகளாக நடைபெற்று பின்பு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நினைவு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
குறிப்பாக ராமநாதபுரம் நந்திதேவர் சிலம்பாட்டக் கழக குழுவில் இருந்து பங்குபெற்ற அணியினர் வில்வித்தைப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பிடித்து சிலம்ப ஆசான் ராஜ்குமார் அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பெற்றோர்கள் பலரும் இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததோடு தலைமை ஆசான் மற்றும் அனைத்து சிலம்ப ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.


