புனித நார்பர்ட் ஆர்.சி மேல்நிலைப்பள்ளியின் 25ம் ஆண்டுவிழா, வெள்ளி விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவெற்றியூரில் அமைந்துள்ள புனித நார்பர்ட் ஆர்.சி மேல்நிலைப்பள்ளியின் 25-ஆம் ஆண்டு விழா, வெள்ளி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருவாடானை வட்டாட்சியர் ஆண்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகக் கவிஞர் கவித்தைகரை வினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில், ராமநாதபுரம் மாவட்ட அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன், பாகம்பிரியாள் கோவில் குருக்கள் மணிகண்டன், தொண்டி சார்பு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, எஸ்.எம்.ஜே முகமதியா குரூப் சேகுமஸ்தான் ராஜா, புனித நார்வட் ஆர்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மரிய சூசை உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறபபு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் அமைந்தன. குறிப்பாக மனிதனின் கற்காலம் முதல் தற்காலம் வரையிலான மாற்றங்கள்.
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அன்றாட நிகழ்வுகளை வரிசைப்படுத்தி தத்ரூபமாக மேடையில் கலை நிகழ்ச்சிகளாக அரங்கேற்றினர்.
இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

