ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபவம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம், ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் 41-வது தலமான பிரசித்தி பெற்ற பங்கஜ வல்லி தாயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனமும் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. பங்கஜவல்லி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண முன்னதாக வைபவத்தை முன்னிட்டு பெண்கள் மேளத்தாளங்கள் முழங்க சீர்வரிசை தட்டு எடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து பங்கஜவல்லி தாயார், ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் ஆகம முறைப்படி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் விக்னேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில், அறங்காவலர்கள் சதீஷ், சீதாலட்சுமி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் , திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.


