ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா அம்மனுக்கு 1008 லட்டு அர்ச்சனை
நெல்லை மாநகாில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா. அம்மனுக்கு 1008 லட்டு அர்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாநகரம் கொக்கிரகுளம் தாமிரபரணி நதிக்கரையில் 150 வருடங்கள் பழமைவாய்நத ஸ்ரீமுத்தாரம்மன் சமேத குருசாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் அம்பாளுக்கு ஆடி முளைப்பாரி திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கிது.
10 தினங்கள் நடைபெறும் திருவிழா திருவிழா நடைபெறும் நாட்களில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் முளைப்பாரி கும்மியும் நடைபெற்றது. ஆடி ஞாயிற்றுக்கிழமையும் பூர நட்சத்திரமான இன்று அம்பாளுக்கு 1008 லட்டு அர்ச்சனை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்றது.
இதற்காக இன்று காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் முளைப்பாரி தலையில் சுமந்து கோவிலுக்கு வர ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரவில் விநாயகா் சுவாமி அம்பாளுக்கு 1008 லட்டுகள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டடது.
நிறைவாக விநாயகா் சுவாமிஅம்மன் மற்றும் உற்சவாருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இரவில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


