in

100 ஆண்டுகளுக்குப் பின்பு ஸ்ரீகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

100 ஆண்டுகளுக்குப் பின்பு ஸ்ரீகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 

ஒட்டன்சத்திரம் அருகே கொத்தையம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்குப் பின்பு ஸ்ரீகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்பு ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

முதல் நாளன்று மங்கல இசை, விநாயகர் பூஜை, புண்ணியாகம், பஞ்சகவ்யம், தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாள் மகா கணபதி பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி நடந்தது. மூன்றாம் நாள் விநாயகர் பூஜை, மூன்றாம் நாள் காலை யாக வேள்வி நடந்தது.

அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. ஸ்ரீ காளியம்மன் கோபுர விமானங்களுக்கு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

 

இதனைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், சிறப்பு உபசார தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

முத்தாலம்மன் கோவில் திருவிழா வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்