ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா
திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா 18 ஆம் போர் செல்லும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா 18 ஆம் போர் செல்லும் நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ பீமன் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கரகம் முதலில் கோயிலை வலம் வர தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ பீமர் கோயிலை உட்பிரகாரம் வலம் வந்து பண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து 18 ஆம் நாள் போருக்கும் செல்லும் நிகழ்வை தாரதப்பட்டைகளுடன் வானவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பிர்லா எஸ். செல்வம், பிர்லா எஸ் காண்டீபன் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.


