ஸ்ரீ அழகியநாதர் (எ) கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம்
கிபி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையானதும், அப்பர், திருநாவுக்கரசர் ஆகிய இருவரால் தேவார பாடல் பெற்ற தலமான தர்ம ஸம்வர்த்தினி சமேத ஸ்ரீ அழகியநாதர் (எ) கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது சோழம்பேட்டை. இங்கு கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான, முழுவதும் செங்கல் கற்களால் கட்ட பட்ட . அப்பர் ஞானசம்பந்தர் ஆகிய இருவரால் பாடல் பெற்ற ஸம்வர்த்தினி உடனாகிய ஸ்ரீ அழகியநாதர் (எ) கல்யான சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலய மகா கும்பாபிசேகத்தையொட்டி, புனித நீர் கடங்கள் வைத்து, யாகசாலை அமைத்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் நான்கு கால பூஜை செய்து பூர்னா ஹீதி நடைபெற்று தீபராதனை நடைபெற்றது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் புனித நீர் கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க புறப்பட்டு கோயில் கோபுர கலசங்களை சென்றடைந்து, புனித நீரை கோபுர கலசங்களில் மகா கும்பாபிசேகம் மிக சிறப்பு மாக நடைபெற்றது.

பழமையான இக்கோயில் கும்பாபிசேகத்தை ஆயிரக்கனக்கான பக்தர்கள் கண்டு களித்து சிவனின் அருளை பெற்றனர்.


