in

நத்தம் அருகே நாய்கள் துரத்தியதில் கம்பி வலையில் மோதி புள்ளிமான் பலி

நத்தம் அருகே நாய்கள் துரத்தியதில் கம்பி வலையில் மோதி புள்ளிமான் பலி

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய் பட்டி அருகே கற்பூரவள்ளி குட்டு மலைப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இன்று மலையிலிருந்து தண்ணீர் தேவைக்காக 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதை பார்த்த தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தியது. இதில் மிரண்டு ஓடிய புள்ளிமான் கனவாய்ப்பட்டி மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே உள்ள கம்பி வேலியில் இருந்த கல்லில் பலமாக மோதியதில் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானது.

தகவல் அறிந்து அங்கு வந்த நத்தம் வனத்துறையினர் இறந்த புள்ளிமானை மீட்டு வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இறந்த புள்ளிமானை வனத்துறை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டது.

நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் தங்களின் உணவு தேவைகளுக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும்போது அடிக்கடி இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு காட்டு மாடுகள் மற்றும் புள்ளி மான்கள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

மின்விளக்குகள் இல்லாததால் இருண்டு கிடக்கும் கொள்ளிடம் பாலம்

அரசு பேருந்து மோதி டைம் கீப்பர் ராமு என்பவர் உயிரிழந்தார்