உலக அளவில் பிரபலமான ஆன்மீக தலைவர் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் குருஜி உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சிறப்பு ஜெபம் வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக உள்ளது தர்மபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் இங்கு நாள்தோறும் சஷ்டி பூர்த்தி ஆயுள் ஹோமம் சதாபிஷேகம் கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமணம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெறுகிறது
இந்நிலையில் உலக அளவில் பிரபலமான ஆன்மீக தலைவர் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் குருஜி கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார் முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஆளு உயர மிளகு மாலை அணிவிக்கப்பட்டது
பின்னர் வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பாக கோவிலில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது கோவிலில் அவர் ஆயுள் விருத்திக்காக மிருத்திஞ்சிய ஜபம் செய்தார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் கண்ணை மூடிக்கொண்டு சிறப்பு ஜெபம் செய்து வழிபட்டார் ஏராளமான குருக்கல்கள் அமர்ந்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர் முன்னதாக சுவாமி சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார் அப்பொழுது அவர் தாமரை மலரை எடுத்து பூஜை தட்டில் வைத்தார் பசுபூஜை கஜ பூஜையில் ஈடுபட்டார் கோவிலுக்கு வந்த அவரை ஏராளமான பக்தர்கள் சூழ்ந்து கொண்டு அவரிடம் ஆசி பெற முற்பட்டனர்.