in

ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி

ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி.

 

நெய்வேலி ஹோலி கிராஸ் பள்ளியில் 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட யோகா பயிற்சி நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் பிருந்தா தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நெய்வேலி மனவள கலை மன்றம் துணைத் தலைவர் ஏழுமலை மற்றும் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி யோகாவில் ஒருங்கிணைப்பாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளித்தனர்.

இதில் மாணவர்களுக்கு யோகா பயிற்சிகளான மூச்சுப் பயிற்சி, கழுத்துப் பயிற்சி, கை பயிற்சி உள்ளிட்ட 31 வகையான யோகா ஆசன பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் தினமும் யோகா பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருக்கும் எனவும் இதனால் மாணவர்கள் தங்கள் கல்வியில் அதிக கவனத்த செலுத்தி மனநிலையை ஒருநிலைப்படுத்தி அதிக மதிப்பெண் பெற இப்ப பயிற்சிகள் உதவுகிறது என்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் எடுத்துரைத்தனர்.

நிகழ்வில் ஹோலி கிராஸ் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், ஆசிரியர் ரமிளா பேகம், பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோபமடைந்த அமைச்சர் சி.வே. கணேசன்

குபேரா First Day Collection