சித்தணி ஸ்ரீவராஹிஅம்மன் தேய்பிறை பஞ்சமி சிறப்பு யாகம்
சித்தணி ஸ்ரீவராஹிஅம்மன் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் சித்தணி கிராமம் ஸ்ரீவராஹிஅம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான திரவியங்கள் வாசனைப் பொருட்கள் நவதானிய பொருட்கள் மற்றும் பூர்ணாஹுதி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட கலசத்திற்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் ஸ்ரீவராஹி அம்மன் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீவராஹி அம்மனுக்கு பஞ்சமுக திபாதாரணை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ சாய் சிவகுருநாதன் குருக்கள் செய்திருந்தார்.


