in

ஆஷாட நவராத்திரி வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் பால்கோவா அலங்காரம்

ஆஷாட நவராத்திரி வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் பால்கோவா அலங்காரம்

 

வளர்பிறை பஞ்சமி மற்றும் ஆஷாட நவராத்திரியின் 5ம் நாளை முன்னிட்டு மயிலாடுதுறை துலா கட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் மற்றும், பால்கோவா கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு 100 கிலோ இனிப்பு பொருட்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு, தர்மபுரம் மடாதிபதி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. ஆனி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. அம்மனின் போர்படை தளபதியாக விளங்கும் வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக இது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கடந்த 25ம் தேதி துவங்கி மங்கள வராகி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஐந்தாம் நாளான நேற்று ஆஷாட நவராத்திரியின் பஞ்சமி திதி என்பதால் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.

தொடர்ந்து பால் பன்னீர் மஞ்சள் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அம்மனுக்கு பால்கோவா கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து ஜாங்கிரி மைசூர் பாக், லட்டு உள்ளிட்ட பல்வேறு 100 கிலோ இனிப்பு பலகாரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சோடச தீபாரதனைகளுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது.

தர்மபுரம் ஆதீன 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற பூஜையில், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம், வாராகி வழிபாட்டு மன்ற தலைவர் பாண்டுரங்கன் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

கேஸ் கசிவால் தீ விபத்து 2 கூறை வீடுகள் எரிந்து நாசமானது

ஜெபமாலைபுரம் குப்பை கிடங்க இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்