in

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு ஆராதனை

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு ஆராதனை

 

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு ஆராதனைகள் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து சன்னதி முன்பு உற்சவர் கிருஷ்ணரை எழுந்தருள செய்து பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து வண்ண மலர்மாலைகள் கொண்டு அலங்கரித்து சிறிய பல்லக்கில் எழுந்துருளினார்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் கிருஷ்ணரை கோவில் உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்தனர்.

நிறைவாக சிறப்பு பூஜை நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ண பெருமாளை வழிபட்டனர்.

What do you think?

விவசாய பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்