in

அமெரிக்கா -ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறைந்து அமைதி நிலவ வேண்டி மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

அமெரிக்கா -ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறைந்து அமைதி நிலவ வேண்டி மதுரையில் சிறப்பு பிரார்த்தனை

பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க மதுரையில் சிலிண்டர் வைத்து சிறப்பு பிரார்த்தனை

மேற்காசிய நாடுகளில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் நடைப்பெறுவதால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. பல்லாயிரக்கணக் கானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து போர் நிலவிவருவதால் உலக நாடுகள் பதற்றமடைந்து வருகிறது.

   

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா -ஈரான் உலக அமைதி வேண்டி மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள ஶ்ரீ மகா பெரியவா கோவிலில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலக அமைதி வேண்டி மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு மலர்களால் சிறப்பு அர்ச்சனை நடைப்பெற்றது.

இதை தொடர்ந்து No War.. Need Peace அதாவது வேண்டாம் போர்… வேண்டும் அமைதி என்ற பிளக்ஸ் பிடித்து. சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்து அகல் விளக்கேந்தி பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 58வது ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

What do you think?

கடுகப்பட்டு ஊராட்சியில் பேருந்து வசதி கோரி கிராம பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

பழனி மலைக்கோயிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம் செய்தார்.