சாய் பாபா கோவிலில் குரு வார சிறப்பு வழிபாடு
நாமக்கல் இந்திரா நகர் சாய் பாபா கோவிலில் குரு வார சிறப்பு வழிபாடு ! ஏராளாமான பக்தர்கள் பங்கேற்ப்பு.
நாமக்கல் – திருச்சி சாலை, இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு.
ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் புரட்டாசி வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
நாமக்கல், இந்திரா நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் புரட்டாசி மாதம் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாமக்கல், ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் புரட்டாசி மாதம் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. காலையில் சாய்பாபாவுக்கு ஆரத்தி, கலச பூஜை, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

மதியம் ஆரத்தி தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கோவிலில் பக்தர்கள் தியானம் செய்ய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


