பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயிலில் ஶ்ரீ சீதளாதேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பழமை வாய்ந்த ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோயிலில் இன்று புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சீதளாதேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டங்களில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டும் பூர்ணாஹூதி சமர்ப்பித்தும் ஹோமம் சிறப்பாக வளர்க்கப்பட்டு பூஜிக்கப்பட்ட கலச குண்டத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனி சன்னதியில் அருள் பாலிக்கும் சீதளாதேவிக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், மற்றும் கலச நீரை ஊற்றி சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சீதளாதேவிக்கு நீல நிற பட்டுடுத்தி வண்ணமலர் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சீதளாதேவிக்கு தூபம் காட்டப்பட்டு நட்சத்திர ஆனைராதயுடன், தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சீதளாதேவிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்.


