in

சொக்கநாதபுரம் 18ம் ஆண்டு ஸ்ரீ சத சண்டி மகா பிரத்யங்கிரா தேவி யாகம்

சொக்கநாதபுரம் 18ம் ஆண்டு ஸ்ரீ சத சண்டி மகா பிரத்யங்கிரா தேவி யாகம்

 

சொக்கநாதபுரம் ஸ்ரீ உக்ர பிரத்தியங்கிரா தேவி திருக்கோவில் 18ம் ஆண்டு ஸ்ரீ சத சண்டி மகா பிரத்யங்கிரா தேவி யாகம்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் 18 ஆம் ஆண்டு ஸ்ரீ சத சண்டி மகா மஹா ப்ரத்யங்கரா தேவி யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இத்திருக்கோவிலில் அமர்ந்த நிலையில் பிரித்திங்கரா தேவி அருள் பாலித்து வருகிறார் தேவிக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நவ சண்டி யாகம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்கியது முன்னதாக அம்மன் சன்னதி முன்பு பிரம்மாண்ட யாக குண்டம் அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை செய்து சிவாச்சாரியார்கள் மகா பிரித்திங்கரா தேவி யாகத்தை நடத்தினர் தொடர்ந்து கணபதி பூஜையுடன் யாக பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.

யாக குண்டத்தில் நெய் சக்கரை பொங்கல் பட்டு சேலைகள் பூமாலைகள் எலுமிச்சை பழ மாலைகள் 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் அனைத்து வகை பழ வகைகள் இனிப்பு வகைகள் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாககுண்டத்தில் சமர்ப்பித்தனர் நிறைவாக யாக மஹா பூர்ணாகுதி அளிக்கப்பட்டு பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப் பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவி அம்மனை வழிபட்டனர்.

What do you think?

5 வருடப் போராட்டங்களுக்கு பிறகு இலவச வீட்டு மனை பட்டா, இனிப்பு வழங்கிக் கொண்டாடிய திருநங்கைகள்.

சிவகங்கை கண்டதேவி ஸ்ரீ குங்கும காளியம்மன் திருக்கோவில் ஆனி மாத தேரோட்டம்